குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்

Update: 2022-09-04 17:07 GMT
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நத்தப்பட்டு ஊராட்சி நத்தப்பட்டு காலனியில் மின் மோட்டார் பழுதடைந்ததால் கடந்த 2 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். ஆத்திர அவசர தேவைக்காக அருகில் உள்ள கிரமாத்துக்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வசதி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்