தூர்ந்துபோன அல்லிக்குளம்

Update: 2022-09-02 14:19 GMT
மேல்மலையனூர் அருகே பழம்பூண்டி கிராமத்தின் மேற்கு பகுதியில் அல்லிக்குளம் உள்ளது. இந்த குளம் நிரம்பினால் அருகில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும். தற்போது இந்த குளம் தூர்ந்து போய் காணப்படுகிறது. எனவே இக்குளத்தை தூர்வாரி, சுற்றிலும் கற்கள் பதித்து குளத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்