சங்கராபுரம் தாலுகா மூக்கனூர் ஊராட்சியில் உலகுடையாம்பட்டு, சிவபுரம் ஆகிய கிராமங்களில் மினி குடிநீர் தொட்டி, 12 கைப்பம்புகள் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக இருக்கின்றன. குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடிவடிக்கை எடுக்க வில்லை. குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.