சாக்கடை கால்வாயில் ஓடும் குடிநீர்

Update: 2022-08-28 17:47 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சாக்கடை கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள அந்த குடிநீர் குழாயின் மூடி இல்லாததால் தண்ணீர் வீணாக கழிவுநீரில் கலந்து ஓடுகிறது. இப்படி அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் முன்பு குடிநீர் குழாயின் மூடி இல்லாமல் தண்ணீர் வீணாகிறது. சாக்கடை கால்வாய் வழியாக வினியோகம் செய்யப்படும் தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-ராஜா, பட்டணம் முனியப்பன் பாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்