அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்

Update: 2022-08-28 12:25 GMT

சேலம் கந்தம்பட்டி மேற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் வினியோகம் செய்ய பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குடிநீர் குழாய் உடைந்ததால் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் இன்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.  பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் குழயை சரிசெய்து முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்