தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2022-08-25 15:20 GMT

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்வதில்லை என்றும், இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீர் கிடைக்கும் இடங்களை தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், மல்லசமுத்திரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்