நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் பி.டி.ஆர். விரிவு பகுதியில் 5௦௦-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 7 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அலைந்து திரிகின்றனர். மேலும் காசு கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே மேற்கண்ட பகுதியில் தினசரி முறையாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.