ரெயில் சேவை தொடங்கப்படுமா?

Update: 2023-07-23 10:49 GMT

கடந்த 2021-ம் ஆண்டு சரக்கு போக்குவரத்துக்காக திறக்கப்பட்ட வாலாஜா சாலை சந்திப்பு-ராணிப்பேட்டை அகல ரெயில் பாதை பயணியர் சேவைக்கும் திறக்க வேண்டும். அதன் மூலம் ரெயில்வேத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் . இந்தப் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் விரைவில் முடிக்க வேண்டும் . தற்காலிகமாக டெல்டா மாவட்டங்களில் உள்ளதுபோல், அரக்கோணம் சந்திப்பு-வாலாஜா சாலை சந்திப்பு-ராணிப்பேட்டை இடையே டீசல் யூனிட் ரெயில்களை இயக்கலாம். இந்த ரெயில் பாதையின் மூல திட்டமான நகரி-திண்டிவனம் ரெயில் பாதை பணிகளை மீண்டும் தொடங்கி, ராணிப்பேட்டையில் இருந்து ரெயில் சேவை தொடங்கப்படுமா?

-ருத்ரேஷ்குமார், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்