காட்பாடி ரெயில் நிலையத்துக்குள் டவுன்பஸ்கள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி வந்தன. கடந்த 2 ஆண்டுகளாக டவுன் பஸ்கள் ரெயில் நிலையத்துக்குள் செல்வது இல்லை. அதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக வேலூருக்கு ரெயிலில் வரும் நோயாளிகள், முதியவர்கள் தங்கள் உடமைகளை சாலை வரை எடுத்து வர முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே காட்பாடி ரெயில் நிலையத்துக்குள் அனைத்து டவுன் பஸ்களும் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.