தாழ்தள பஸ்களில் கட்டண விவரம் எழுதப்படுமா?

Update: 2025-11-16 11:48 GMT

அரசு போக்குவரத்துக்கழகம் தாழ்தள பஸ்களை காட்பாடியில் இருந்து பாகாயம் வரையிலும், வள்ளிமலை, அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய பகுதிகளுக்கும் இயக்குகிறது. இந்தப் பஸ்களில் மகளிருக்கு இலவசம் இல்லை. அத்துடன் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5-க்கு பதிலாக ரூ.11 எனவும், காட்பாடியில் இருந்து சி.எம்.சி. பஸ் நிறுத்தம் வரை ரூ.17 வசூலிக்கப்படுகிறது. பாகாயம் செல்ல ரூ.23 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டண விவரம் பஸ்களில் எழுதப்படாததால் கண்டக்டர்கள் பயணிகளிடம் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இந்தப் பஸ்சுக்கான கட்டண விவரத்தை தாழ்தள பஸ்களில் எழுத நடவடிக்கை எடுப்பார்களா?

-பி.துரை, செங்குட்டை. 

மேலும் செய்திகள்