அரக்கோணத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால், பல பஸ்களில் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அரக்கோணம் நகரில் இருந்து நேரடியாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் வகையில் புதிய பஸ் வசதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். நேரடி பஸ் வசதி செய்யப்பட்டால் பொதுமக்களின் அலைச்சல் குறைவதுடன் பயண நேரமும் குறையும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குமார், அரக்கோணம்.