சாலையில் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-15 17:32 GMT

திருப்பத்தூர் கச்சேரி சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்தக் கடைகளுக்கு பொருட்களை ஏற்றி, இறக்குவதற்கு லாரிகள் எந்த நேரமும் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் கச்சேரி சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சரியான நேரத்துக்கு செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கச்சேரி சாலை தெருவில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சரக்கு வாகனங்களை வர அனுமதிக்க வேண்டும்.

தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்

மேலும் செய்திகள்