போக்குவரத்துக்கு இடையூறு
திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு பங்களா பஸ் நிறுத்தம் சிக்னல் அருகில் மரக்கிளைகளை வெட்டி பாதி ரோட்டிற்கு மேல் போட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள். பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் இப்பகுதி வழியாக வரும் வாகனங்களால் அதிக நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை சீக்கிரம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
மோகன், திருப்பூர், 98658 43557: