வேகக்கட்டுப்பாடு தேவை
மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பஸ் நிலையம் அருகில் வளைவான சாலை உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பொது மக்கள் சாலையைக் கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மற்றும் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என பலரும் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகன ஒட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆறுமுகம், கொமரலிங்கம்.