வேலூர் மாவட்டத்தில் பிரபலமான பொய்கை வாரச்சந்தையில் பார்க்கிங் வசதி இல்லை. ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் ஏற்படுத்தக்கூடிய சந்தையாக இருப்பதால், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லை. அவர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விடும் நிலை உள்ளது. இதனால் வாரச்சந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாரச்சந்தை பகுதியில் வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தி தர துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.