வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-11-29 14:06 GMT

மொரப்பூர் அருகே திப்பம்பட்டியில் அரூர், காரிமங்கலம், திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 4 ரோடு சந்திப்பு உள்ளது. இந்த 4 ரோடு சந்திப்பில் இருந்த வேகத்தடை மற்றும் ரவுண்டானா அகற்றப்பட்டு உள்ளதால் வாகனங்கள் கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் இருந்து பிரிந்்து செல்லும் 4 ரோடுகளிலும் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்