கோத்தகிரியிலிருந்து குன்னூர் மற்றும் ஊட்டி செல்லும் சாலையில் காம்பாய் கடை முதல் கிருஷ்ணாபுதூர் நிறுத்தம் வரை சாலையோரத்தில் கனரக வாகனங்களையும் கழிவு நீர் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தி வைக்கப்படுகின்றன. தற்போது கோத்தகிரி சாலை ஒருவழி சாலையாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளது. எனவே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க இந்த சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.