பெரியநாயக்கன்பாளையம் ரெயில் நிலையத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து பஸ் நிலையத்துக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதுவரை இயக்கப்பட்டு வந்த பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணிகள் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.