வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே சவுரிபாளையம் செல்லும் சாலையில் விவசாயிகள் கடைகள் அமைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி, போக்குவரத்து பாதிப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.