கோவை ரத்தினபுரி சங்கனூர் ஓடையை ஒட்டி உள்ள சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஏற்கனவே அந்த சாலைகள் மிகவும் குறுகலானது. தற்போது அங்கு வாகனங்களும் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். அவ்வப்போது அங்கு சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.