சிவகங்கை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நெரிசல் காரணமாக அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்.