கிடப்பில் போடப்பட்ட பாலப்பணிகள்

Update: 2026-10-25 15:45 GMT

கரூர் மாவட்டம் ரத்தின சாலையில் கழிவுநீர் முறையாகச் செல்ல முடியாமல் சாலையில் தேங்கும் நிலை உள்ளது. இதற்குத் தீர்வு காண சாலையின் நடுப்பகுதியில் குழிகள் தோண்டப்பட்டு, பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 4 மாதங்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிடப்பில் உள்ள பாலப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்