ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை நேரங்களில் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமமடைகின்றனர். எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.