விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-10-25 15:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிப் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு, செல்போன் கேபிள் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. பிரதான சாலைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் 5 முதல் 10 அடி ஆழம் வரை உள்ள பள்ளங்கள் எந்தவித எச்சரிக்கை அறிவிப்புகளுமின்றி காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடும் ஏற்படுவதால், பணிகள் முடிந்த இடங்களில் பள்ளங்களைப் பாதுகாப்பாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்