சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் சிலர் சாலையில் ஆபத்தை உணராமல் மோட்டார்சைக்கிள்களில் அதிவேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் பாதசாரிகள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் எதிரே பயணிக்கும் பிற வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். மேலும் இதனால் விபத்து அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.