பஸ் வசதி தேவை

Update: 2026-10-25 14:39 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து இந்த அலுவலகங்களுக்கு பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்