அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் பகுதியில் மாலை 6.45 மணிக்குப் பிறகு அரசு பஸ் இயக்கப்படவில்லை. தற்போது மாலை 5.30 மணி அளவிலும், இரவு 7.55 மணி அளவிலும் ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதுவும் முறையாக இயக்கப்படுவதில்லை. மாலை 6.45 மணிக்குப் பிறகு அரசு பஸ் இல்லாத நிலையில், மினி பஸ்சும் சரியாக இல்லாததால் பெண்கள் மற்றும் மாணவிகள் தவித்து வருகின்றனர். எனவே மாலை 6.45 மணிக்கு பிறகும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?