முன்சிறையில் இருந்து வடசேரிக்கு 310 ‘பி’ அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 7.50 மணிக்கு முன்சிறையில் இருந்து புறப்பட தாமதமாகிறது. கருங்கலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய பஸ் 4 மணிக்கு புறப்படுகிறது. இதனால், பள்ளி-கல்லூரி மாணவர்கள் , வேலைக்கு சென்று திரும்பும் மாணவர்களும், வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த அரசு பஸ் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சரியாக இயக்கப்படுகிறது. எனவே, மாணவர்கள், தொழிலாளர்கள் நலன்கருதி மேற்கூறிய அரசு பஸ்சை முறையாக இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரஸ்வதி, முன்சிறை.