மொடக்குறிச்சி அருகே கஸ்பாபேட்டை நால்ரோடு சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் நிழற்குடை இல்லாததால் பயணிகள் கால் கடுக்க வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மழை காலங்களில் கடும் அவதியடைகின்றனர். கஸ்பாபேட்டை நால்ரோடு சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு பயணிகள் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?