பஸ் சேவை மீண்டும் தொடங்குமா?

Update: 2026-09-27 13:46 GMT

சூலூர் ஒன்றியம் மயிலம்பட்டி ஊராட்சி கரையாம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வழியாக நீலாம்பூர்-காந்திபுரம் வழித்தடத்தில் காலை 8 மணி மற்றும் மாலை 4.45 மணி என இருவேளைகளில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா காலத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது. எனவே நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்