விபத்து அபாயம்

Update: 2026-09-27 13:45 GMT

கோவை திருச்சி சாலை ஒண்டிபுதூரை அடுத்த காமாட்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் சாலையை கடக்கவே அச்சப்படுகிறார்கள். அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்.

மேலும் செய்திகள்