திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து துறையூர், கொப்பம்பட்டி, தம்மம்பட்டி, வாழப்பாடி, சேலம் வழியாக பெங்களூருவுக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் பல பஸ்களில் மாறி மாறி பயணம் செய்வதால் பண விரயமும், கால விரயமும் ஏற்படுகிறது. எனவே பயணிகளின் நலன் கருதி பெங்களூருவுக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.