செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் உள்ள டீ கடை பஸ் நிறுத்தம் மற்றும் பள்ளி பஸ் நிறுத்தத்திற்கு இடையே நெடுஞ்சாலை உள்ளது. அந்த சாலையை கடப்பதற்கு சுமார் 1 கிலோமீட்டர் வரை சுற்றி வரவேண்டும் என்பதால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலையை கடந்து செல்ல இருப்பு மேம்பாலம் அமைத்து தரவேண்டி என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.