கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தண்டுமாரியம்மன் கோவில் வழியாக அவினாசி ரோடு செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும், அவினாசி ரோட்டில் இருந்து விதிமுறையை மீறி வரும் வாகனங்களாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் அவதி அடைகின்றனர். எனவே விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.