பஸ் நிறுத்தம் இடம் மாறுமா?

Update: 2026-08-30 13:46 GMT

கோவை 100 அடி சாலை சிக்னல் பகுதியில் சிவானந்தா காலனி நோக்கி செல்லும் வழியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக தினமும் ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர். அங்கு பஸ்கள் வந்து திரும்பும் பகுதி ஆபத்தான வளைவாக உள்ளது. இதனால் பஸ்களில் ஏற வரும் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் விபத்து அபாயம் குறையும். 

மேலும் செய்திகள்