நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து தாழக்குடி மற்றும் தாழக்குடி வழியாக ஆரல்வாய்மொழி வரை அரசு மகளிர் இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மூலம் அந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பஸ்கள் குறித்த நேரத்திற்கு முறையாக இயக்கப்படாமல் முன்னதாகவே செல்கின்றன. இதனால் அந்த பஸ்சிற்காக தயாராக வரும் மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரிக்கு செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் பஸ்களை சரியான நேரத்திற்கு இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலன், தாழக்குடி.