பர்கூர் அருகே வரட்டனப்பள்ளி பஸ் நிலையத்தில் மிகவும் குறுகலான சாலை வளைவு உள்ளது. இதனால் எதிர் திசையில் வரும் வாகனங்களும் தெரிவதில்லை. மேலும் அப்பகுதி மேடு, பள்ளமாகவும் உள்ளதால் அடிக்கடி விபத்தும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன. எனவே காலதாமதம் இன்றி இப்பகுதியில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்யவும், சிதிலமடைந்த பகுதியில் தார்சாலையை சரிசெய்ய வேண்டும்.