தெருநாய்களால் அச்சம்

Update: 2026-08-30 13:52 GMT

கோவை கணபதி பாலமுருகன் நகர் செல்லும் வழியில் தெருநாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் இரவுப்பணி முடிந்து வாகனங்களில் செல்லும் ஊழியர்களை நாய்கள் துரத்திச் செல்கிறது. இதனால் அவர்கள் வாகனங்களில் இருந்து தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அங்குள்ள ஒத்தைபுளியமரம் பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நாய்கள் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குளை எரியச் செய்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்