தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் மாலையம்மன் கோவில் அருகில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தம் மற்றும் ரெயில் நிலையம் நுழைவு வாயில் அருகே கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தொலைவில் சென்றுதான் பஸ் நிற்கிறது. நிழலுக்காக நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் ஓடிச்சென்று பஸ்சில் ஏற வேண்டியுள்ளது. முறையாக பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.