ஈரோடு அருகே பள்ளபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட எல்லீஸ்பேட்டையில் ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் வாகனங்கள் அதிக வேகமாக சென்று வருகின்றன. அங்கிருந்து சிறிது தூரத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடக்கும்போது வாகனம் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?