திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை சந்திப்பில் வாகனங்கள் சாலையோரம் முறையற்ற வகையில் நிறுத்தப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போலீசாரை நிறுத்தவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.