திருவள்ளுர் மாவட்டம், பஞ்செட்டி ஊராட்சியில் உள்ள ஜி.டி.என். சாலை, எப்போதும் வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலை. இந்த சாலையில் உள்ள போக்குவரத்து மின்விளக்குகள் சில சமயம் சரியாக வேலை செய்வதில்லை. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாய நிலையும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.