ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு கமுதி பஸ் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட அளவே அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதிகளில் இருந்து பயணிக்கும் பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.