திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்ல அம்பத்தூர், ஆவடி போன்ற இடங்களுக்கு செல்லவேண்டியுள்ளது. ஆனால் அங்கு செல்வதற்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் மக்கள் அதிக தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.