பெரம்பலூர் மதனகோபாலபுரம, வெங்கடேசபுரம் பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வளாகங்களில் வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்வித வாகன நிறுத்துமிட வசதியும் இல்லை. இதனால் அவர்கள் மெயின் சாலைகளில் சாலையை ஆக்கிரமித்தவாறு தங்களது வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இவ்வாறு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.