ஆபத்தான மரம் அகற்றப்படுமா?

Update: 2026-06-07 11:28 GMT

புதுக்கோட்டை மாநகராட்சி உழவர் சந்தை அருகே சாலையோரத்தில் ஆபத்தான வகையில் சாய்ந்த நிலையில் ஒரு மரம் வளர்ந்துள்ளது. இந்த சாலையில் தினமும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் நிலையில், அருகே சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியும், உழவர் சந்தையும் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில் இந்த மரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதுடன், முறிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்