பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தில் வட்டார அலுவலகம் அருகே இரூர் பஸ் நிறுத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு பணிகள் நடப்பதற்கான எந்த அறிவிப்பு பதாகைகளும், எச்சரிக்கை விளக்குகளும் இல்லாத நிலையில், தடுப்புகளும் அமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பொருட்சேதம், நேர விரயம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.