புதுச்சேரி காராமணிக்குப்பம் ரெயில்வே கேட் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பராமரிப்பு பணி நடைபெற்றது. இதற்காக அகற்றப்பட்ட சிமெண்டு சிலாப் முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் ரெயில்வே கேட் பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனை ரெயில்வே அதிகாரிகள் சரிசெய்வார்களா?