திருச்சி மாநகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் பாலம் உள்ளது. புதிய பாலம் கட்டும் பணிக்காக இந்த பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் தேங்குவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அண்ணாசாலையில் இருந்து மேலசிந்தாமணிக்கு செல்லும் பொதுமக்கள் பாலப்பணிகள் காரணமாக சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்வதால், மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பாலப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.