அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து தேரடி, சத்திரம் பஸ் நிறுத்தம் வரை சாலையோரங்களில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக முதன்மை சாலையிலேயே நிறுத்துவதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க இப்பகுதியில் ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.